skip to main |
skip to sidebar

இராமனைத் தெய்வமாக்கவே
இராவணனை கொடுங்கோணாக்கினாய்..?
கோவிலுக்கோர்
உருத்தோவையன்றோ
கொற்றவன் மகனே மட்டுமானவனுக்கு
கோதாண்டம் கொடுத்தாய்....?
இராம தூதக்குரங்கிற்கு
நினைத்ததும் நிழும் மகிமை
நிச்சய முன் கவி கற்பித்ததன்றி
வேறிருக்க முடியுமோ ?
கம்பரே, காவியம்படைத்தீர் அதில்
காழ்ப்புணர்ச்சி ஏன் கொண்டீர்..?
திராவிடத் தலைவனை
தீட்டுடையோனாக்கியதேன் ?
புத்திரசோகத்தில் திழைத்த உமக்கு,
புத்திரசோகமுடைய தசரதன்
பத்தரைமாற்றாய் தெரிந்தானோ..?
பாதகம் செய்தீரோ தமிழ்மன்னனுக்கு..
பொங்கும் கவி நீ
புதுப்புவிக் கவி நீ எனவெல்லாம்
புகழப்பெற்ற கவிச்சக்கரவர்தியே
பொய் புகன்றதும் ஏனோ நீ..?
சீதைக்கும் ராவணன்
சிறந்திருந்தான்........
அழகிய தேசமொன்றை
அக்கினி மூட்டியழித்து
அடங்காக்கிரமம் பண்ணி
அழைத்து வந்து தன்னை
ஊருக்கும் உறவுக்கும்
ஊறற்றவளெனத் தன்னை
உத்தமியாய்க் காட்ட
தீ க்குள் தள்ளியவேளை....
ராவணன் உயர்ந்திருப்பான்
ராமனை விட அவள்மனதில்
சிறைப்பிடித்தும் கண்ணியங்காத்த
அவனெங்கே.......
தீக்குள் தள்ளியெனை
தீண்டவில்லை இவள் கற்பை
மாற்றானென மற்றவர்க்காய்
மார்தட்டும் இவனெங்கே யென.....
குடியான ஒருவன்
குடியுளறலில் புகன்ற
சொற்கேட்டுத் தன்னை
புக்கம்விட்டுத் துரத்துகையில்
சீதை சிரம்தாழ்த்தியிருப்பாள்
ராவணனின் சீர் குணத்திற்காய்
பெண்மையைப் போற்றத் தொரிந்த
பெருமகன் அவனென.....