
சீதைக்கும் ராவணன்
சிறந்திருந்தான்........
அழகிய தேசமொன்றை
அக்கினி மூட்டியழித்து
அடங்காக்கிரமம் பண்ணி
அழைத்து வந்து தன்னை
ஊருக்கும் உறவுக்கும்
ஊறற்றவளெனத் தன்னை
உத்தமியாய்க் காட்ட
தீ க்குள் தள்ளியவேளை....
ராவணன் உயர்ந்திருப்பான்
ராமனை விட அவள்மனதில்
சிறைப்பிடித்தும் கண்ணியங்காத்த
அவனெங்கே.......
தீக்குள் தள்ளியெனை
தீண்டவில்லை இவள் கற்பை
மாற்றானென மற்றவர்க்காய்
மார்தட்டும் இவனெங்கே யென.....
குடியான ஒருவன்
குடியுளறலில் புகன்ற
சொற்கேட்டுத் தன்னை
புக்கம்விட்டுத் துரத்துகையில்
சீதை சிரம்தாழ்த்தியிருப்பாள்
ராவணனின் சீர் குணத்திற்காய்
பெண்மையைப் போற்றத் தொரிந்த
பெருமகன் அவனென.....
No comments:
Post a Comment