Friday 25 June 2010

கவிச் சக்கரவர்தமே பொய் புகன்றதுமேனோ நீ ?


இராமனைத் தெய்வமாக்கவே
இராவணனை கொடுங்கோணாக்கினாய்..?

கோவிலுக்கோர்
உருத்தோவையன்றோ
கொற்றவன் மகனே மட்டுமானவனுக்கு
கோதாண்டம் கொடுத்தாய்....?

இராம தூதக்குரங்கிற்கு
நினைத்ததும் நிழும் மகிமை
நிச்சய முன் கவி கற்பித்ததன்றி
வேறிருக்க முடியுமோ ?

கம்பரே, காவியம்படைத்தீர் அதில்
காழ்ப்புணர்ச்சி ஏன் கொண்டீர்..?
திராவிடத் தலைவனை
தீட்டுடையோனாக்கியதேன் ?

புத்திரசோகத்தில் திழைத்த உமக்கு,
புத்திரசோகமுடைய தசரதன்
பத்தரைமாற்றாய் தெரிந்தானோ..?
பாதகம் செய்தீரோ தமிழ்மன்னனுக்கு..

பொங்கும் கவி நீ
புதுப்புவிக் கவி நீ எனவெல்லாம்
புகழப்பெற்ற கவிச்சக்கரவர்தியே
பொய் புகன்றதும் ஏனோ நீ..?

சீதைக்கும் சிறந்திருப்பான் ராவணன்.....


சீதைக்கும் ராவணன்
சிறந்திருந்தான்........

அழகிய தேசமொன்றை
அக்கினி மூட்டியழித்து
அடங்காக்கிரமம் பண்ணி
அழைத்து வந்து தன்னை

ஊருக்கும் உறவுக்கும்
ஊறற்றவளெனத் தன்னை
உத்தமியாய்க் காட்ட
தீ க்குள் தள்ளியவேளை....

ராவணன் உயர்ந்திருப்பான்
ராமனை விட அவள்மனதில்
சிறைப்பிடித்தும் கண்ணியங்காத்த
அவனெங்கே.......

தீக்குள் தள்ளியெனை
தீண்டவில்லை இவள் கற்பை
மாற்றானென மற்றவர்க்காய்
மார்தட்டும் இவனெங்கே யென.....

குடியான ஒருவன்
குடியுளறலில் புகன்ற
சொற்கேட்டுத் தன்னை
புக்கம்விட்டுத் துரத்துகையில்

சீதை சிரம்தாழ்த்தியிருப்பாள்
ராவணனின் சீர் குணத்திற்காய்
பெண்மையைப் போற்றத் தொரிந்த
பெருமகன் அவனென.....

Saturday 20 March 2010

அரக்கர் என்றால்- அழகரோ?

அரக்கர் என்றால்
அழகரே?

சிவனின் மைந்தனோ
இவன் சிந்தித்தானாம்
அனுமன்,
இராவணன் மகன்
இந்திரஜித்தின் அழகில்
மயங்கி

பின் அந்த அனுமன்
மண்டோதரியைக் கண்ணுற்று
இவர் தனோ சீதையெனசிந்தித்தானாம்.

மகிழ்சியாய் அவர் இருந்தைமையால்
துன்புற்றல்லோ சீதையிருப்பார்?
எனத்தெளிந்தானாம்.

அப்படியெனில்
பேரழகியான சீதையோடு
மண்டோதரியின் அழகும் சிறந்ததாகிறதே- பின்

அரக்கரென்பதேன்
அழகில் சிறந்தோர் என்பதினாலோ?
அரக்கர் என்றால் அழகரே............?

Friday 19 March 2010

இவர்கள் இன்று அகதியாம்

அளகாபுரி அமராவதியிலும்
இலங்காபுரி சிறந்ததாம்
வால்மீகி கூறியிருக்கிறார்.

திராவிட நாகரீகம் சிறப்புற்றிருந்தது
அளகாபுரியில், அதைவிட திராவிடம்
இலங்காபுரியில் சிறந்ததாம்.

வால்மீகி இலங்காபுரியை
சுந்தர காண்டத்தில் கூறினார்- பின்னதன்
சிறப்பைக் கூறவும் வேண்டுமோ?

அனுமன் வியந்தானாம்,
சிறப்புக்கு சீர்தூக்கிறார்களே
கவிகள் அளகாபுரியையும், அமராவதியையும்!

இலங்காபுரியை அறியவில்லையே
இவர்கள் -அறிந்திருந்தால்
அதிசிறந்தது இதுவன்றல்லோ கூறியிருப்பர். -என

அனுமன் கண்ட இலங்காபுரி ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போல்,
அழகிய நகராயிருந்ததுவாம்.

இவ்வாறு சிறந்திருந்த நம்
இலங்கையில்-திராவிடம் வாழ்ந்த
இலங்கையில்-

"இவர்கள் இன்று அகதியாம்".

18

18

17

16

15

15

14

13

12

11

10

9

8

7

7

6

5

4

3

2

1